சமஷ்டி வந்தால் தமிழீழம் மலரும் – தேரர் எச்சரிக்கை

?????????????????????????????????????????????????????????

சமஷ்டி நிர்வாகம் உருவானால் ஈழம் உருவாகும் என்று எல்லே குணவன்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு பொது நூலகத்தில் சமஷ்டி நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே எல்லே குணவன்ச தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்-

பஞ்சமகா சக்திகளின் ஒன்றிணைந்த கட்சியாக திகழ்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரொஸ்மிட் பிளேஸ், வோர்ட் பிளேஸ் போன்ற சக்திகளின் கைக்கூலியாக மாறிவிட்டது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் எனக்கு கிடைத்தது. அதிலுள்ள விடயங்களின் அடிப்படையில் தேர்தல்களின் போது இன மற்றும் மத அடையாளங்களை பயன்படுத்த முடியாது.

தேரவாத பௌத்தம் பாதுகாக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மத்தியில் மட்டுமே பௌத்த பிக்குமார் இனத்தையும் மதத்தையும் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர்.

காவி உடையிலிருப்பதால் எதனையும் செய்ய முடியாது என பிரபாகரனும் ஒருமுறை கூறியிருந்தார். இன்று அதனை நிறைவேற்ற காவி உடையை அழிக்கும் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் ஈழம் உருவானால் பௌத்த மதத்திற்கு சாவு மணி அடிக்கப்படும். கிறிஸ்தவ மதம் நாட்டின் பிரதான மதமாக மாறும். உலக இனங்களில் சிங்கள இனம் ஒரு சிறுபான்மை இனமாக மாறும். எனினும் இந்த இனத்தை சுற்றி பல சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

சமஷ்டி உருவானால் ஈழம் மலரும். அலாவத்தை என்ற பெயர் தமிழில் சிலாபம் எனவும் ஆங்கிலத்தில் சிலவ் எனவும் மாறியுள்ளது. இதேபோன்று வடக்கில் பல கிராமங்கள் தமிழாகவும் மாறியுள்ளன. ஸ்ரீலங்கா என்பதை இலங்கை என்று கூறுகின்றனர். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ஈழத்திற்கான உறுதிப்பத்திரம் எழுதி முடிக்கப்பட்டு விட்டது.

இந்த உறுதிக்கமைய எல்லைகளை அமைக்கவே தற்போது தயாராகி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com