சமஷ்டித் தீர்வானது மக்களை பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைக்கும்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று முற்பகல் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாலே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு , மல்வத்து பீடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் உட்பட வடமாகாண அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது, வடமாகாணத்தில் 89,000 ஆயிரம் விதவைகள் உள்ளதாகவும், அவர்களுக்கு தொழில் வழங்குவதற்கு வழிவகையின்றி, வாழ்வாதாரம் எதுவுமின்றி வாழ்கின்றனர்.

அத்துடன், வடபகுதிக் கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் வடபகுதி மீனவர்கள் பாதிப்படைகின்றனர். இவ்வாறு நாங்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றோம்.

இப்பிரச்சனைகளை தென்னிலங்கையிலுள்ளவர்கள் அறியவேண்டும். வடக்கில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும். நீங்கள் இப்பிரச்சனையை தென்னிலங்கை அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தவேண்டுமெனத் தெரிவித்த அவர், வடக்கில் பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளமை தொடர்பிலும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மகாநாயக்க தேரரிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், அரசியல் தொடர்பாக பேசுவதற்கு மகா நாயக்க தேரர் விரும்பவில்லை.

ஆனால் எம் மக்களுக்கு நேர்ந்த கதி, அனாதைப் பிள்ளைகள், விதவைகள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சம்பந்தமாக பல கேள்விகளைக் கேட்டு அறிந்துகொண்டார்.

அவர் அரசியல் தொடர்பாகப் பேசாவிட்டாலும், நான் சமஷ்டித் தீர்வானது நாட்டிலுள்ள மக்களை பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினேன் எனவும்தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com