சனிப் பெயர்ச்சி பலன்கள் – மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)

தோல்விகளால் சோர்வு அடையாதவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும், நல்ல பலன்களையே தருவார்.

உங்கள் ராசிநாதன் சனி 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங் களை விரைந்து முடிப்பீர்கள். கம்பீரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். வழக்கு களில் சாதகமான திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பழுது சரியாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம். மற்றவர்களுடன் அளவோடு பழகவும். பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளவும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். பேச்சால் பிரச்னை வரக்கூடும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், செல்வாக்கு உயரும். தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும்.

வியாபாரிகளே! போட்டிகளை மீறி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து, வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அனுபவசாலிகளை பணியில் சேர்ப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிக்கவும். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் களுடன் மோதல்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணினித் துறையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள். மாணவ – மாணவிகளே! படிப்பில் அதீத கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி உண்டு.கலைத் துறையினரே! உங்களது படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பரவும். உங்களின் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, பழைய பிரச்னைகளில் இருந்து உங்களை விடுபட வைப்பதாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், கொஞ்சம் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். ஊர்ப் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், இக்காலக் கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தடைப்பட்டிருந்த கல்யாணம் கூடிவரும். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 25.2.20 முதல் 16.7.20 வரையிலும் 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வழக்கில் திருப்பம் உண்டாகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:

29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பிரபலங் களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com