சனல் 4 வெளியிட்ட போர்குற்ற புகைப்படத்தில் காணாமல் போன எமது மகன் உள்ளார்

சனல் 4 வெளியிட்ட போர்குற்ற ஆதார புகைப்படத்தில் காணாமல் போன எமது மகனும் உள்ளார் என தாய் தந்தையர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

யாழில் நடைபெற்று வரும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வின் மூன்றாம் நாள் அமர்வு திங்கள்கிழமை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

அந்த அமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தமது சாட்சியத்தில் தெரிவிக்கையில் , 
எமது மகனான புஸ்பராஜா அஜிந்தன் (காணாமல் போகும் போது வயது 17 ) மாத்தளன் பகுதியால் இராணுவ கட்டுபாட்டு பகுதிக்குள் வரும் போது 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி காணாமல் போனார்.
நாம் முகாமுக்கு வந்து எமது மகனை பற்றி விசாரித்த போது சிலர் கூறினார்கள் இராணுவம் பிடித்து சிலரை வைத்து இருந்ததை தாம் வரும் போது கண்டதாகவும் அதில் உங்கள் மகனும் இருந்ததாக கூறினார்கள். அதன் பின்னர் மகனை பற்றிய தகவல் இல்லை.
அந்நிலையில் 2013ம் ஆண்டு 3ம் மாதம் 15ம் திகதி சனல் 4 ஊடகம் போர் குற்ற ஆதார புகைப்படங்களை வெளியிட்டு உள்ளதாக பத்திரிகைகளில் புகைப்படங்கள் வெளி ஆகி இருந்தன.
அதில் ஒரு புகைப்படத்தில் எமது மகனும் இருக்கின்றார். என தமது சாட்சியத்தில் குறிப்பிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com