சந்திரிக்கா வழியில் சந்துரிக்கா பயணிக்கவுள்ளார்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகளான சந்துரிக்கா, இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் வழியைப் பின்பற்றி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

இதன் ஆரம்பக் கட்ட ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், அது நிறைவு பெற்றதும் தனது அரசியல் பயணம் தொடர்பாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் அவர், விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆரம்பமாகவே இன்று ஜனாதிபதித் தாத்தா எனும் நூலை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட்டார் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது அரசியல் பயணத்தை மாகாணசபையில் போட்டியிட்டு ஆரம்பித்ததைப்போல், மைத்திரியின் மகள் சந்துருக்கா 2018ஆம் ஆண்டு மகாணாசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com