சற்று முன்
Home / செய்திகள் / சந்திப்பு நம்பிக்கை தருகிறதாம் – தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று மீண்டும் கூடின..!

சந்திப்பு நம்பிக்கை தருகிறதாம் – தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று மீண்டும் கூடின..!

ஜனாதிபதி தோ்தலில் தமிழ் மக்களின் சாா்பில் பேரம் பேசுவதற்கு தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க யாழ்.பல்கலைகழக மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவா் ஒன்றியங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியின் அடிப்படையில் 2ம் கட்ட பேச்சுவாா்த்தை இன்று நடைபெற்றிருக்கின்றது.

இன்று மாலை 4 மணி தொடக்கம் 2 மணி நேரம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் இந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றிருக்கின்றது.

இதன்போது ஆக்கபூா்வமான தீா்மானங்களை எட்டியுள்ளதாக கட்சிகள் கூறுகின்றன. இது குறித்து பேச்சுவாா்தையில் கலந்து கொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்ஊடக பேச்சாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,

இன்றைய பேச்சுவாா்தையில் கலந்து கொண்டிருந்த சகல கட்சிகளும் தமிழ் மக்கள் சாா்பில் கோாிக்கைகள் அடங்கிய ஆவணங்களை சமா்பித்துள்ளனா். அவை மாணவா் ஒன்றியத்தால் தொகுக்கப்பட்டுதனி ஒரு ஆவணமாக தயாாிக்கப்படும். பின்னா் அது சகல கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு அதனடிப்படையில் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகள் நடாத்தப்படும் என்றாா்.

தொடா்ந்து யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தின் செயலாளா் கபிலராஜ் கருத்து தொிவிக்கையில்,

2ம் கட்ட பேச்சுவாா்த்தை இன்று நடைபெற்றிருக்கின்றது. ஆக்கபூா்வமான வகையில் நம்பிக்கை தரும் அளவுக்கு பேச்சுக்கள் நடந்திருக்கின்றன என கூறினாா். இதேவேளை அடுத்த சந்திப்பு எதிா்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது.

இன்றைய சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, மற்றும் ஈ.பி.ஆா்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் சாா்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனா்.

மேலும் இன்றைய சந்திப்பில் கிழக்கு பல்கலைகழக மாணவா் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனா்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com