சற்று முன்
Home / செய்திகள் / சட்ட நடைமுறைகளை கேலிக்குள்ளாக்கிய ஆர்னோல்டின் மெத்தனமே முதலமைச்சரிடம் முறையிடக் காரணம்

சட்ட நடைமுறைகளை கேலிக்குள்ளாக்கிய ஆர்னோல்டின் மெத்தனமே முதலமைச்சரிடம் முறையிடக் காரணம்

யாழ் மாநகரசபையின் முதல்வர் ஆர்னோல்டினால் சபை அனுமதியின்றிய தன்னிச்சையான முடிவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவந்த புரழ் முகாமைத்துவம் தொடர்பில் விவாதிப்பதற்காக சபையைக் கூட்டுமாறு அவருக்கு அறிவித்தும் சட்டப் பிரகாரம் சபையைக் கூட்டாததாலேயே இவ்விடயம் உள்ளூராட்சி அமைச்சர் என்றவகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரமு் யாழ் மாநகரசபை உறுப்பினருமான வி. மணிவண்ணன் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலமைச்சர் ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (01.05.2018) செவ்வாய்க்கிழமை கொக்குவிலில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர்,

யாழ் மாநகரசபையின் புரழ் முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சரான வடக்கு மாகாண முதலமைச்சரிம் நாங்கள் ஒரு முறைப்பாட்டிின மேற்கொண்டிருந்தோம். அந்த முறைப்பாட்டிலே நாங்கள் முன்று விதமான குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தோம்.
01) இதுவரை யாழ் மாநகரசபையில் எந்தவிமான உபகுழுக்களும் நியமிக்கப்படவில்லை
02) மாநகரசபையின் அனுமதியின்றி நிதிக்கொடுக்கல்வாங்கல்கள் நடைபெறுகின்றமை
03) யாழ் மாநகர முதல்வர் தன்னுடைய கையொப்பத்துடன் யாழ் நகரசபையின் இலட்சணையைப் பொறித்து தேர்வுசெய்யப்படாத உறுப்பினர்களுக்கு தனது பிரத்தியோக இணைப்பாளர் என்ற நியமனக் கடிதம் வழங்கியுள்ளார்.
இது அதிகார துஸ்பிரயோகம் என்ற விடயத்தையும் நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

நாங்கள் அரசியல் காழ்ப்புணற்சியில் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் சிறிய விடையத்தை பெரிதாக்கிவிட்டதாகவும் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பில் முதல்வர் ஆர்னோட் கூறியிருந்தார். நாம் இவ்விடயம் பற்றி முதலில் அறிந்தே சபையைக் கூட்டுமாறு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அவருக்கு கடிதம் கொடுத்திருந்தோம். அதனடிப்படையில் அவர் 07 நாட்களுக்குள் சபையைக் கூட்டியிருக்கவேண்டும். காசு வீணாகிவிடும் என்பதால் தான் சபையைக் கூட்டவில்லை என்று அவர் பதிலளித்திருக்கிறார்.
சட்டப்பிரகாரம் சபையின் உபகுழுக்களை நியமித்து நிதிக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டிருக்காத அவர் தன்னிச்சையாக ஏன் இவ்வாற முடிவுகளை எடுத்தார் என்பது அவருக்கு மட்டமே வெளிச்சம்.
அவரிடம் அறிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காததாலேயே அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து
யாழ் மாநரசபைக்குப் பொறுப்பான உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையிலே முதலமைச்சரிடம் குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.

சபை முதல்வரின் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் குழப்புகின்ற விதமாக நாங்கள் எந்தவொரு இடத்திலும் செயற்பட்டிருக்கவில்லை. ”தூய கரங்கள் தூய நகரம்” எனக் கூறியே நாங்கள் தேல்தலில் போட்டியிட்டிருந்தோம். கரங்கள் அழுக்காவதை எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சபையில் மோசடிகள் இடம்பெற்றால் நாங்கள் கண்காணித்துக்கொண்டிருப்பொம். எமது கட்சி உறுப்பினர்கள் மீதுகூட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் தகுந்த நடடிவக்கை எடுப்போம். இது மக்கள் தெரிவுசெய்த சபை. நாங்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்வோம். இதை முன்னரும் நாங்கள் கூறியிருந்தோம். இதன் முதலாவது நடவடிக்கையே யாழ் மாநகர முதல்வருக்கு எதிரான நடவடிக்கை.

சில விடயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் இலங்கை முழுவதிலுமுள்ள மாநகரசபைகளுக்கான சட்டத்தின் 26 ஆவது பிரிவின் உப பிரிவு 01 ஒவ்வொரு மாநகரசபையும் ஆண்டின் முதலாவது கூட்டத்திலே கட்டாயமான நிதி உபகுழு உள்ளிட்ட குழுக்களை அமைக்கவேண்டும் எனக் கூறுகின்றது.
இவ்விடத்தில் ஒரு விடயத்தை மக்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம். சபையின் முதலாவது கூட்டம் மார்ச் 26 ஆம் திகதி நடைபெற்றது. அதன்போது முன்னாள் மேயராக இருந்த ஈபிடிபி உறுப்பினரான யோகேஸ்வரி பற்குணராஜா முதலாவது கூட்டத்திலே உபகுழுக்களை அமைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு ஆம் அமைப்போம் எனக் கூறிய முதல்வர் ஆர்னோல்ட் இதுவரை எந்தக் குழுவையும் அமைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஏப்பிரல் 20 ஆம் திகதியும் எமது நான்கு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபையைக் கூட்டி உபகுழுக்களை அமைக்குமாறு முதல்வருக்கு நேரடியாக கடிதம் கொடுத்திருந்தோம். எனவே அவர் தன்னிடம் பேசாமல் முதலமைச்சரிடம் சென்று முறையிட்டதாக கூறிவிட முடியாது.

சபையைக் கூட்டி குழுக்களை நியமிப்பதற்கு நான்காயிரத்து ஜந்தூறு ரூபா கூட செலவாகியிருக்காது. அவர் வீண் செலவு ஏற்படும் என்பதால் சபையைக் கூட்டவில்லை என்கிறார்- என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com