சட்டப்பேரவையில் பன்னீர் அணிக்குத் தாவிய எம்.எல்.ஏ.க்கள்?

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கும்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேர் திடீரென பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி, பன்னீர்செல்வம், செம்மலை ஆகியோர் பேசினர்.

பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்தபோது, அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், அவரை துரோகி என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பன்னீர் செல்வம் அணியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கிடையே வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, 38 பேர் எழுந்துநின்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்றனர். இதனால், எதிர் அணியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளிக்கிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பு திடீரென நிறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com