சற்று முன்
Home / செய்திகள் / சஜித் அணி ரணிலுக்கு புதிய தலைவலி!

சஜித் அணி ரணிலுக்கு புதிய தலைவலி!

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க இது தருணமல்ல. நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கையையும், ஜனாதிபதி தேர்தலின் பின்னரே மேற்கொள்ள வேண்டுமென, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று, ரணிலிடம் நேரடியாக தெரிவித்து விட்டதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர், இதுபோன்ற நடவடிக்கைகள் பொருத்தமற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கு எதிராக ரணிலிடம் கருத்து சொன்ன எம்.பிக்கள் குழுவில் சஜித் பிரேமதாசவும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க ஆகியோர், சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்க சம்மதம் தெரிவித்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நடந்து வரும் விசேட அமைச்சரவை கூட்டத்திலும் மங்கள சமரவீர உள்ளிட்ட சஜித் தரப்பு அமைச்சர்கள், நிறைவேற்றதிகார ஒழிப்பிற்கு எதிராக, பிரதமர் ரணிலுடன் கடுமையான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com