சற்று முன்
Home / செய்திகள் / சஜித்தை மக்கள் தெரிவு செய்து விட்டனர்.. இனி கட்சியின் முடிவே ?

சஜித்தை மக்கள் தெரிவு செய்து விட்டனர்.. இனி கட்சியின் முடிவே ?

ஐனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை மக்கள் தெரிவு செய்து விட்டனர். அனேக மக்களின் எதிர்பார்ப்பாகவும் சஜித் பிரேமதாசாவே இருக்கின்றனர். இனி அவரை கட்சி தான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர யாழில் தெரிவித்துள்ளார்.

என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர புகையிரதத்தில் யாழிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய இன்று மதியம் யாழ் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய அமைச்சர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சியின் ஐனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை மக்கள் தெரிவு செய்து விட்டனர். அனேக மக்களின் எதிர்பார்ப்பாகவும் சஜித் பிரேமதாசாவே இருக்கின்றனர். அதே நேரத்தில் இனி அவரை கட்சி தான் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்த பின்னர் அவரின் வெற்றிக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும்.

குறிப்பாக சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக பதுளை, மாத்தறை என கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. இதில் மகிந்த ராஜபக்சவின் தொகுதியான குருநாகலிலும் கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது. அங்கு வரலாற்றில் இல்லாதவாறு அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறு செல்கின்ற இடமெல்லாம் சஜித் பிரேமதாசவையே மக்கள் எதிர்பார்த்து அவருக்கே தமது ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.

மேலும் நான் புகையிரதத்தில் வருகின்ற போது இரு பக்கமும் அமைச்சர் சஜித் பிரேமதாசா முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பிலே பதாகைகளும் போஸ்ரர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அவ்வாறு அவர் மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் தான் மக்கள் அவரை எதிர்பார்க்கின்றனர்.

ஆகவே ஐ.தே.க வின் சார்பில் அமைச்சராக இருக்கின்ற அவரை மக்கள் தெரிவு செய்து விட்ட நிலையில் இனி அக்கட்சியினர் வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டியதில்லை என்றே நான் கருதுகின்றேன் என தெரிவித்தார்.

இதே வேளை யாழில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இக் கண்காட்சியானது ஏனைய இடங்களை விட பிரமாண்டமான முறையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல்வெறு பயனுள்ள விடயங்கள் இருக்கின்றது. அகவே இதற்கு அனைவரும் வந்து அதனைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com