சற்று முன்
Home / செய்திகள் / சஜித்தை திட்டமிட்டுத் தோற்கடித்த வரலாற்றுத் துரேகிகள் ஐதேகவிலேயே உள்ளன – நளின் பண்டார

சஜித்தை திட்டமிட்டுத் தோற்கடித்த வரலாற்றுத் துரேகிகள் ஐதேகவிலேயே உள்ளன – நளின் பண்டார

ஐக்கிய தேசியக் கட்சியில் பதவிகளை வகிக்கும் வரலாற்று சிறப்புமிக்க காட்டிக்கொடுப்பவர்கள் சிலர் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்துள்ளதாக பிரதியமைச்சர் நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த காட்டிக்கொடுப்பாளர்களே நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

சஜித் பிரேமதாச தோல்வியடைவதை கண்டு கட்சியின் பதவிகளில் இருக்க முயற்சிக்கும் இந்த நபர்கள் அவசரமான பொதுத் தேர்தல் மூலம் வெற்றியை தாம்பூலத்தில் வைத்து கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட அணியினரிடம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போதுமான நிதி கிடைக்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பதை தேடி அறிய வேண்டும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவைக்கு தொடர்ந்தும் பதவியில் இருக்க தார்மீக உரிமையில்லை. அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சியில் அமர கோத்தபாய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்த அவசியமில்லை எனவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com