சற்று முன்
Home / செய்திகள் / சஜித்தை ஆதரிப்பதாக மைத்திரி சொல்லவேயில்லை!

சஜித்தை ஆதரிப்பதாக மைத்திரி சொல்லவேயில்லை!

சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அவரை ஆதரிப்பதாக ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லையென தெரிவித்துள்ளார், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க.

நேற்று அநுராதபுரத்தில் நடந்த நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.

“ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியா அல்லது வேறு யாருமா போட்டியிடுவதென்பது இரண்டாவது விசயம். முதலாவது, ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை களமிறக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம். எந்த நேரத்திலும் ஒரு வேட்பாளரை களமிறக்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம். தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றோ, சஜித் போட்டியிட்டால் ஆதரிப்பேன் என்றோ, எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி சொல்லியிருக்கவில்லை“ என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com