சசிகலா காலில் விழுந்தார் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் – பரபரப்பை ஏற்பத்திய வீடியோ

முதல்வர் பதவி வகிக்கும் பன்னீர்செல்வம் சசிகலா காலில் விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. முதல்வர் பதவியை இப்படியா அசிங்கப்படுத்துவது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா காலிலும் முதல்வர் பதவி வகிக்கும் ஓ பன்னீர்செல்வம் விழுந்து கும்பிட்டது அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சசிகலா காலில் ஓபிஎஸ் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளில் தலைவர்கள் காலில் விழும் கலாசாரம் என்பது தமிழகத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. தலைவர்களைத் தாண்டி தங்களது தகுதிக்கும் குறைவானவர்கள்; தங்களது பதவிக்கும் கீழானவர்கள் காலில் விழுந்து அதீத விசுவாசத்தை வெளிப்படுத்துகிற அவலங்களும் தமிழகத்தில் நடக்கத்தான் செய்கின்றன. அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை நாடகங்கள் மூலம் கைப்பற்றினார் சசிகலா. அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தைக் கூட ஜாதி வாரியாகத்தான் கொண்டு போய் சசிகலாவிடம் கொடுக்க ஏற்பாடு செய்யபப்ட்டது. பொதுவாக கட்சி பொதுக்குழு தீர்மானத்தை அவைத் தலைவர் தலைமையிலான நிர்வாகிகள்தானே கொடுக்க வேண்டும். ஆனால் ‘முக்குலத்தோர்’ ஓ.பி.எஸ்., ‘கவுண்டர்’கள் தம்பிதுரை, எடப்பாடி, தலித் ராஜலட்சுமி, செட்டியார் பொள்ளாச்சி ஜெயராமன், வன்னியர் கே.பி.முனுசாமி, இஸ்லாமியர் அன்வர்ராஜான் என அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில்தான் சசிகலாவிடம் தீர்மானம் கொடுத்தனர். இப்படித்தான் வந்து கொடுக்க வேண்டும் என்பது போயஸ் கார்டன் உத்தரவாம்.
செம நாடகம் பின்னர் பொதுச்செயலர் பதவியேற்க வந்த சசிகலா காரைவிட்டு இறங்கும்போது அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆனால் சில வினாடிகளிலேயே தம் முகத்தை படுசோகமாக வைத்துக் கொண்டு துயரத்தில் இருப்பதாக காட்டிக் கொண்டார். அதிமுக பொதுச்செயலராக பொறுப்பேற்றார் சசிகலா.

சசி காலில் பன்னீர் அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டென சசிகலாவின் காலில் முதல்வர் பதவி வகிக்கும் ஓ பன்னீர்செல்வம் விழுந்து கும்பிட்டார்.. இதனால் வேறுவழியின்றி அமைச்சர் சீனிவாசனும் சசிகலா காலில் விழுந்து கும்பிட்டார்.
வைரலாகும் வீடியோ அரசியல் சாசனப் பதவி வகிக்கும் முதல்வரும் அமைச்சர்களும் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் நபரின் காலில் விழுந்து கும்பிட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சசிகலா காலில் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விழுந்து கும்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதல்வர் பதவியை அசிங்கப்படுத்தும் வகையில் இப்படியா பன்னீர்செல்வம் நடந்து கொள்வது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com