க.பொ.த சாதாரண தரம் – வடக்கில் 256 பேர் 9 ஏ சித்தி சுமார் ஆயிரத்து 400 பேர் 8 ஏ சித்தி

வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு (2016) க.பொ.த சாதரணப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கையில் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளனர்.
இவ்வாறு இவர்கள் 09 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருக்கும் அதேநேரம் 1400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் 8 பாடங்களில் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ளனர்.

இதன் பிரகாரம் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியில் மாணவர்களாக வலய ரீதியில் கணிக்கப்பட்ட வேளையில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 110 மாணவர்களும் , வடமராட்சி கல்வி வலயத்தினிலர 50 மாணவர்களும் , வவுனியா தெற்கு வலயத்தில் 34 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். அதேபோன்று வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 19 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றுள்ளனர்.

இதேவேளை மன்னார் கல்வி வலயத்தினில் 18 மாணவர்களும் , தென்மராட்சி கல்வி வலயத்தினில் 12 மாணவர்களும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களில் தலா 7 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை ஏனைய நான்கு வலயங்களிலும் 9 பாடங்களிலும் ஏ சித்திகள் இல்லாதபோதிலும் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்று அந்த வலயங்களும் இம் முறை ஓர் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளனர்.

இதுவரை கிடைத்த தகவல்களின் பிரகாரம் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது.

இவ்வாறு இச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களிற்கு மாகாணத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும். இந்த பெறுபேற்று வீதம் மேலும் அதிகரிக்க பாடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com