கோயில் திருவிழாவிற்குப் போனதால் சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை – சம்பந்தன் தரப்பு விளக்கம்

இலங்கை அரசின் பங்காளிகளாகச் செயற்பட்டுவரும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இலங்கையின் 69 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளாது புறக்கணித்தமை தொடர்பில் சிங்கள ஊடகங்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டு வந்த நிலையில்  சம்பந்தன் சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

‘திருகோணமலையில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெறும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றுள்ளமையாலேயே, எதிர்க்கட்சித் தலைவரால் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என தமிழரசுக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, இது தொடர்பில், விழா ஏற்பாட்டு குழுவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடையம் குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்டுளரும் ஐயங்கள் தேவையற்றவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com