கோத்தாவை கோர்த்துவிட்டார் ஹெகலிய !

keheliyaகடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி இரவு, மனித உரிமைகள் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, காணாமல் போன, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் தொடர்பிலான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அங்கு சாட்சியம் அளித்துள்ள முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்துக்களின்அடிப்படையிலேயே கடத்தப்பட்ட லலித் மற்றும் குகன் அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பதாக தான் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் குறித்த வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் மேற்படி வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதன்போது சாட்சியமளித்த கெஹலிய ரம்புக்வெல்ல,

பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்துக்களையே தான் கூறியதாகவும், அதைவிட வேறு என்ன தெரிவித்தேன் என்பது பற்றி ஞாபகம் இல்லை என்றும் அவர் அவர் கூறினார்.

சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கினை எதிர்வரும் 08ம் மாதம் 12 ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்னதாக, கடத்தப்பட்ட இருவரும் அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பதாக முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com