கோதாகொட மீது நடவடிக்கை எடுக்குக! – ரவி

அனிகா விஜேசூரியவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில், பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டன எனவும், அதற்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று (07) கோரினார்.

இக்குற்றச்சாட்டுகள் காரணமாக, தன்னுடைய நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்றும், அதற்கு ஊடகங்கள் துணைபோயுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

சொகுசுவீட்டின் உரிமையான அனிகா விஜேசூரியவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கும் தனக்கும், எவ்விதச் சம்பந்தமும் கிடையாது என, அவர் இங்கு குறிப்பிட்டார்.

“அனிகா விஜேசூரியவின் சகோதரரான விக்டர் விஜேசூரியவால், பொலிஸிடம் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டது. அம்முறைப்பாட்டின் பிரதியை, பிணைமுறி ஆணைக்குழுவிடம், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, ஒக்டோபர் 07ஆம் திகதி சமர்ப்பித்தார். ஆனால், நெத்திகுமார என்பவர், என்னுடைய உறவினர் அல்லர். அவர், என்னுடைய உறவினர் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட உறுதிப்படுத்துவாராயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்குத் தயாராக உள்ளேன்.

“அவ்வாறு உறுதிப்படுத்தத் தவறும் பட்சத்தில், அவர் பிணைமுறி தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மன்னிப்புக் கோர வேண்டும்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com