கோண்டாவிலில் ரயில் மோதி இளைஞர்கள் பலி

தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் குறித்த விபத்துஇன்று (சனிக்கிழமை) அதிகாலை நந்தாவில் கடவையை அண்மித்த பகுதியில் சம்பவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள், திருநெல்வேலியை சேர்ந்த 18 வயதுடைய ஜெயராம் மற்றும் கல்வியங்காட்டை சேர்ந்த 17 வயதுடைய நிஷாந்தன் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த விபத்துக் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds