கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் – பொலிசார்

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கப்பல் ஒன்றின் கண்டெயினரில் ஏற்பட்ட திடீர் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டிருந்தநிலையில் அதனை அணைப்பதற்காக 50துக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். கொழும்பு தீயணைப்பு பிரிவு மற்றும் துறைமுக தீயணைப்பு பிரிவு என்பன இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.  இந்நிலையில் தீ தற்போது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

அத்துடன் குறித்த கப்பல் இந்தியா நோக்கி செல்லவிருந்த ஒன்று என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds