பற்றி எரிகிறது கொஸ்கமுவ ஆயுதக்கிடங்கு – மக்கள் வெளியேற்றம் – பாடசாலைகளிற்கு விடுமுறை

Vakeesam # Newsகொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக, அவிசாவளை தேர்தல் தொகுதிக்குட்பட்ட, அனைத்துப் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் நாளைய தினம் மூடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

சலாவ தீ விபத்தில் மூவர் காயம்

கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த மூவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

மக்கள் வெளியேறிய வீடுகளை பாதுகாக்க இராணுவத்தினர் ரோந்து:-
‘கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து குறித்த முகாமை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதுடன் மக்கள் கைவிட்டு சென்ற வீடுகளில் உள்ள பொருட்களை பாதுகாக்க இராணுவ வீரர்கள், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’ என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, தெரிவித்தார்.

மாற்று வீதிகளின் விவரம் அறிவிப்பு

கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மூடப்பட்ட அவிசாவளை – இரத்தினபுரி வீதிக்குப் பதிலாக, மாற்று வீதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஹன்வெல்ல, பகோட, கிரிந்திவெல, உரபொல, கொங்கல்தெனிய, ருவன்வெல்ல ஆகிய வீதிகள், மாற்று வீதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

‘வதந்தி வேண்டாம்’

கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் வதந்திகளை பரப்பாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்வதாக ஊடகத்துறை பிரதி அமைச்சர் கரு பரணவிதான, டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டு கேட்டுக்கொண்டுள்ளார். –01
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி:-
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு அவசர உதவிகளை செய்துகொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சுகாதார சேவைகள் சேவைகள் பணிப்பாளர் பாலித்தவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.kosgama-2
அவிசாவளைக்கு 20 அம்பியூலன்ஸ்கள் அனுப்பிவைப்பு:-

சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்தவின் அறிவுறுத்தலின் பேரில் சுமார் 20 அம்பியூலன்ஸ் வண்டிகள் அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. –
இதுவரை உயிர் இழப்புகள் எவையும் பதியப்பட்டிருக்கவில்லை:-
கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினைத் தொடர்ந்து, இதுவரை உயிர் இழப்புகள் எவையும் பதியப்பட்டிருக்கவில்லையென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், அவிசாவளை வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
எனினும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில், அவிசாவளை வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டிகள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பிரதான வீதிக்கு அண்மையில், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தரைப் படை, கடற் படை மற்றும் வான் படையினர் அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அப் பகுதியைப் பார்வையிட எவரும் செல்ல வேண்டாம் என, ஜயநாத் ஜெயவீர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ முகாம் தீ விபத்து – வீதிக்கு பூட்டு:

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹைலெவல் வீதியின் ஹன்வெல்லவில் இருந்து கொஸ்கம வரையான பகுதி மூடப்பட்டுள்ளது.

குறித்த முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்களை அங்கிருந்து வௌியேறுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

இதேவேளை கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப் பகுதியை கண்காணிக்க விமானப் படை விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, விமானப் படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப் பகுதியில் தீயணைப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com