சற்று முன்
Home / செய்திகள் / கொழும்பு அரசியல் குழப்ப வன்முறை – துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி

கொழும்பு அரசியல் குழப்ப வன்முறை – துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி

தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்.இ.ஏ ராஜபக்ஷ எனும் குருணாகல் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆவணங்கள் சிலவற்றை எடுத்துச் செல்வதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குள் வருகைதந்ததாகக் கூறப்படுகின்றது. அதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டிருந்தது.

இதன்போது அர்ஜூன ரணதுங்கவின் ஆடைகளை சிலர் இழுத்து கிழிக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே காயமடைந்த ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com