கொழும்பில் பூகோள, வலய பாதுகாப்பு கருத்தரங்கு

பூகோள மற்றும் வலய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆராயும் கருத்தரங்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது. ‘கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு’ ஓகஸ்ட் மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏழாவது தடவையாக நடைபெறவுள்ளது. இதில் 700 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன. உயர்ஸ்தானிகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல்வாதிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் ஆகியோரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், சார்க் நாடுகளின் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com