சற்று முன்
Home / செய்திகள் / கொள்வனவுசெய்யும் பாலிற்கு பணம்வழங்க பின்னடிக்கும் மில்கோ நிறுவனம் – வாடிக்கையாளர்கள் ஆதங்கம்

கொள்வனவுசெய்யும் பாலிற்கு பணம்வழங்க பின்னடிக்கும் மில்கோ நிறுவனம் – வாடிக்கையாளர்கள் ஆதங்கம்

வன்னிப் பகுதியில் மில்கோ நிறுவனம் கொள்வனவு செய்யும் பாலிற்கான பணத்தை முன்னர் 15 நாட்களிற்கு ஒரு தடவை உற்பத்தியாளர்களிற்கு வழங்கியது. ஆனால் தற்போது 45 தினங்களின் பின்பே வழங்கப்படுவதாக அதன் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வன்னியின் பெரும் பகுதியிலும் உற்பத்தி செய்யும் பால் உற்பத்தியினை தற்போது 3 நிறுவனங்கள் கொள்வனவு செய்கின்றனர். அவை குறிப்பாக லீற்றர் 65 ரூபா முதல் 70 ரூபா வரையில் இடம்பெறும் . இதில் அரச கொள்வனவு நிறுவனமான மில்கோ நிறுவனமும் பால் கொள்வனவில் ஈடுபடுகின்றது. இவர்களால் கொள்வனவு செய்யப்படும் பாலிற்கான பணம் முன்னர் 15 நாட்கள் இடைவெளியில் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் குறித்த நிறுவன உற்பத்தி சந்தையில் சுழற்சியின் தன்மையை காரணம் காட்டி தற்போது 45 நாட்கள் முடிந்த பின்பே முதல் 15 நாட்களிற்கான பணம் வழங்கப்படுகின்றது. இதனால் அங்கத்தவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலமைக்கு காரணம் வெளிநாட்டுப் பால்மாக்கள் இறக்குமதியே காரணம் எனவும் அங்கத்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் மில்கோ அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

தற்போது நாட்டின் மொத்த தேவையின் 39 வீத்த்தினையே எமது நாட்டின் உற்பத்தி நிறைவு செய்கின்றது. இதனால்ல எஞ்சிய 61 விகிதமான தேவைக்காக இறக்குமதி அனுமதிக்கப்படவேண்டிய நிலமையுள்ளது. இந்த நிலையில் உள்ளூர் உற்பத்தியை விட அதிகவிலையில் உள்ள இறக்கும்மிப் பொருட்கள் வெளிநாட்டு மோகம் காரணமாக சந்தை வாய்ப்பு அதிகமாகவும் உள்ளூர் உற்பத்தி சுழர்ச்சி குறைவாகவும் கானப்படுகின்றது.

இவ்வாறு உள்ளூர் உற்பத்திக்கான போதிய சந்தை விற்பனை போதாதமையே உடனுக்கு உடன் வாடிக்கையாளர்களின் பாலிற்கான கொள்வனவுப் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகின்றது. இருப்பினும் அனைவரின் பணமும் அவர்களிற்கே வழங்கப்படுகின்றது. என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com