கொலைவெறியுடன் பேசும் கமால் குணரட்ன எவ்வாறு போர் செய்திருப்பார் ?

கொலை வெறியுடன் பேசும் கமால் குணரட்ன எவ்வாறு போர் செய்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவானவர்களை கொலை செய்ய வேண்டும் என கமால் குணரட்ன கூறியுள்ளார். இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர் எவ்வாறு போர் புரிந்திருப்பார் என்பதனை ஊகிக்க முடியும். படைவீரர்கள் இவ்வாறு கருத்து வெளியிடுவதனால் அவர்களை சர்வதேசத்திடமிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது.

நபர்களை கொலை செய்வதாகவும், நாடாளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதாகவும் கூறுவார்களாயின் அவர்களின் மனோ நிலை பற்றி அளவீடு செய்து கொள்ள முடியும். நாடாளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உறவினர் ஒருவர் மீளவும் நாடாளுமன்றின் மீது தாக்குதல் நடத்துவதாக கூறியிருப்பது பரம்பரை குணவியல்பாகவே கருதப்பட வேண்டும். கடும்போக்குவாதத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது கடும்போக்குவாதத்தை மேலும் ஊக்குவிக்கும். இலங்கையில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதாக உலகின் தமிழ் கடும்போக்குவாதிகள் கூறுவதற்கு தெற்கின் கடும்போக்குவாதிகள் வழியமைத்துக் கொடுக்கின்றனர் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com