கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை

nuwara_court_002கந்தப்பளை, எஸ்கடேல் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பைய்யா வனராஜா என்ற 45 வயது நபரின் தலையில் தாக்குதல் மேற்கொண்டு அவரை கத்தியால் குத்தியதுடன், அவரது உடலை லொறியால் ஏற்றிக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கந்தப்பளைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஹெட்டித்தரிகே காமினி விஜேசூரிய, சமரகே சஞ்சீவ மஹிந்த பண்டார, அதுலகே நலீன் யூசுப் ஆகியோருக்கே மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலைச்செய்யப்பட்ட நபர் உள்ளடங்களாக மேற்படி நால்வரும் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி திருட்டுச் சம்பவமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மரணமடைந்தவருக்கும் மேற்படி மூவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே இக்கொலைக்கு காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான வழக்கு, 01.07.2016 அன்று நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க முன்னிலையில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி மேற்படி மூவருக்கும் மரணத்தண்டனை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com