சற்று முன்
Home / செய்திகள் / கொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்

கொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்

அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி எந்த இடத்திலும், ‘றோ’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை, என்றும், இந்தியப் புலனாய்வு சேவை என்றே குறிப்பிட்டார் என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

தன்னைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துக்குப் பின்னர் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகின.

ஊடகங்களில் வெளியான இந்தச் செய்திகள் தொடர்பாக விளக்கமளித்துள்ள, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக,

“ஜனாதிபதி இந்தியப் புலனாய்வுச் சேவை என்று மாத்திரமே குறிப்பிட்டாரே தவிர, ‘றோ’ என்று கூறவில்லை. தலைவர்களைக் கெலை செய்யும் இரகசிய புலனாய்வு அமைப்புகளின் முயற்சிகள் தொடர்பாக, ஜனாதிபதி பொதுப்படையாகவே பேசினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த நகர்வுகளை அறிந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி உறுதியாக கூறியிருந்தார்.

அத்துடன், எந்த இடத்திலும் ‘றோ’ என்றும் அவர் குறிப்பிடவேயில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com