சற்று முன்
Home / செய்திகள் / கொரோனா நோயாளர்கள் 8 மணி நேரத்துள் 20 ஆல் அதிகரிப்பு – மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது

கொரோனா நோயாளர்கள் 8 மணி நேரத்துள் 20 ஆல் அதிகரிப்பு – மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் 20 பேர் இன்று (மார்ச் 31) செவ்வாய்க்கிழமை இரவு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 31) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியிலிருந்து இரவு 07.30 மணிவரையான 8 மணி நேர காலப்பகுதிக்குள் மட்டும் 20 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 17 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 173 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com