சற்று முன்
Home / செய்திகள் / கொரோனா தொற்று சந்தேக நபர்கள் 213 பேர் வவுனியாவில் !!

கொரோனா தொற்று சந்தேக நபர்கள் 213 பேர் வவுனியாவில் !!

கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டவர்கள் இன்று மாலை 6.30 இற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 5 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 213 பேர் வவுனியா, பம்மைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த நபர்களை பம்மைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, தென் கொாியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 166 போ் ஹிஷ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com