சற்று முன்
Home / செய்திகள் / கொரோனா சந்தேகம் – சண்டிலிப்பாயில் தனிமைப்படுத்தப்படும் 214 சமுர்த்திப் பயளாளிகள்

கொரோனா சந்தேகம் – சண்டிலிப்பாயில் தனிமைப்படுத்தப்படும் 214 சமுர்த்திப் பயளாளிகள்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் 214 சமுர்த்திப் பயனாளிகளை தனிமைப்படுத்துவது தொடர்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.

இன்று (24) நண்பகல் யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் க.மகேஸனை ஊடகவியலாளர்கள் சந்தித்திருந்தனர். அதன்போதே அவர் மேற்கண்ட தகவலை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்து மீளத்திரும்பிய மத போதகர் முலம் அவருடன் நெருங்கிப் பழகிய யாழ்ப்பாணத்தின் தாவடியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதேபோல குறித்த மதபோதகருடன் மிகவும் நெருங்கிப் பழகிய 18 பேர் அடையளங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகரும் ஒருவர் குறித்த மானிப்பாய் போதகரின் மனைவியும் மத ஆராதனைகளில் பங்கேற்றிருக்கிறார்.

குறித்த மானிப்பாய் மத போதகரின் மனைவி சமுர்த்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நிலையில் கடந்த 18, 19 ஆம் திகதிகளில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவினை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் குறித்த சமுர்த்திப் பயனாளிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com