கொமர்ஷல் வங்கியின் இணைய தளம் மீது தாக்குதல். கணக்கு விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

கொமர்ஷல் வங்கியின் இணைய தளம் மீது ஹெக்கர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கடந்த 12ம் திகதியின் வங்கியின் தரவுத் தளத்திலிருந்து சுமார் 7 கிகா பைட் அளவிலான தரவுகளை ஹெக்கர்கள் பிரசுரித்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஹெக்கர் குழுவொன்று இவ்வாறு வங்கியின் இணைய தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்த அறிக்கை உள்ளிட்ட சில விபரங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.எனினும் வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தரவுகள் கடந்த நவம்பர் மாதமளவில் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.12ம் திகதி ஹெக் செய்யப்பட்ட இணைய தளம் 13ம் திகதி மீளவும் சீரமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹெக்கர்கள் எதற்காக இவ்வாறு வங்கித் தகவல்களை திருடுகின்றார்கள் என்பது தெளிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.கொமர்ஷல் வங்கியின் இணைய தளம் மீது ஹெக்கர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கடந்த 12ம் திகதியின் வங்கியின் தரவுத் தளத்திலிருந்து சுமார் 7 கிகா பைட் அளவிலான தரவுகளை ஹெக்கர்கள் பிரசுரித்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஹெக்கர் குழுவொன்று இவ்வாறு வங்கியின் இணைய தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்த அறிக்கை உள்ளிட்ட சில விபரங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.எனினும் வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தரவுகள் கடந்த நவம்பர் மாதமளவில் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.12ம் திகதி ஹெக் செய்யப்பட்ட இணைய தளம் 13ம் திகதி மீளவும் சீரமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹெக்கர்கள் எதற்காக இவ்வாறு வங்கித் தகவல்களை திருடுகின்றார்கள் என்பது தெளிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com