கொத்தணிக் குண்டு தடை பிரகடனத்தில் கையெழுத்திட இலங்கை இணக்கம்!

கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் கையெழுத்திட இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதென ஜெனிவாவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்(4) ஜெனீவாவில் நடைபெற்ற கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் நாடுகளின் 7ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2011ஆம் ஆண்டிலிருந்து இலங்கை கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் மாநாட்டில் கலந்துகொண்டு வருகின்றது.

விரைவில் இந்த பிரகடனத்தில் கையெழுத்திடுவதாக இலங்கை உறுதியளித்திருப்பதை, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்வதற்கும், கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கும் ஆதரவாக பரப்புரைகளை மேற்கொள்ளும் நாடுகளும் அமைப்புகளும் வரவேற்றுள்ளன.

இலங்கை கொத்தணிக் குண்டுகளை உற்பத்தி செய்யாத போதிலும் இறுதிக் கட்ட யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com