கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அடிக்கல் நாட்டும் விழா

IMG_7119கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இட நெருக்கடி காரணமாக முறையான பயிற்சி முறைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் காணப்பட்ட பயிற்சியாளர்களுக்கு கட்டிட வசதியை ஏற்படுத்தும் முகமாக புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா 11.07.2016 அன்று காலை 09 மணியளவில் நடைபெற்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இரதாகிருஷ்ணன் தலைமையில் இவ் அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இவ்விடயம் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தமையினால் இந்த புதிய கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இங்கு அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்காக கல்வி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 60 இலட்சம் ரூபா நிர்மாண பணிக்கென செலவிடப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இரதாகிருஷ்ணன், கலாசாலையின் அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.IMG_7114
IMG_7121 IMG_7122 IMG_7127 IMG_7135 IMG_7140 IMG_7144

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com