கொக்குவிலில் ஆவா குழுவின் துணைத் தலைவர் கைது!

கொக்குவில் பிரதேசத்தில் நேற்றுக் காலை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஆவாக் குழுவின் துணைத் தலைவர் என பொலிஸாரை மேற்கோள்காட்டி கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் நேற்று(15) அதிகாலை உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ரவீந்திரன் தர்ஷன் என்ற இளைஞர் அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இவர் ஆவா குழுவின் துணைத் தலைவர் எனவும், ஆவாக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் கலந்துகொண்டவர் எனவும், இவர் வேறொரு பகுதிக்குத் தப்பிச் சென்றுகொண்டிருந்தபோதே கொக்குவில் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஆவா குழுவின் தலைவர் நிசா உட்பட எட்டுப்பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், யாழில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களுடன் இதுவரை 87பேரைக் கைதுசெய்து விளக்கமறியில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com