கைது செய்யவே எமக்கு அதிகாரம் – நாங்கள் யாரையும் சுடவில்லை – இலங்கை கடற்படை மறுப்பு

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக நேற்று (06)  மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற 7 மீனவர்கள், தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலே ஒரு மீனவர் மரணமடைந்ததாகவும் மற்றய ஒரு மீனவர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படும் நிலையில் இச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என இலங்கை கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாக்குழு மறுத்துள்ளார்.

கடற்படை வேண்டுமென்றே எவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதியளிக்கவில்லை எனவும் அவ்வாறான எந்தவொரு உத்தரவையும் ஒருபோதும் வழங்கியதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்போர் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் அதிகாரத்தையே கடற்படையினருக்கு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com