கைது செய்யப்பட்ட பஷில் பிணையில் விடுதலை – கடவுச்சீட்டை முடக்க உத்தரவு

150422150204_basil_rajapakse_512x288_afp_nocreditஇலங்கையில் நிதிமோசடிக் குற்றச்சாட்டில் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியுள்ள மாத்தறை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மாத்தறை பகுதியில் காணியொன்றை வாங்கியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்திவந்துள்ளனர்.

அந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக பசில் ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் விசேட பொலிஸ் பிரிவின் முன்னால் ஆஜரானார். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, நிதி மோசடிகளை ஆராயும் விசேட பொலிஸ் பிரிவுக்கு மாதம் ஒருமுறை சமுகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, அவரது கீழிருந்த திவிநெகும என்ற வறுமை ஒழிப்புத் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகின்றது.

இந்தப் பின்னணியிலேயே, காணிக் கொள்வனவு தொடர்பான புதிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds