கேப்பாப்புலவு விரைவில் மீட்டுத்தரப்படும்! – சந்திரிக்கா

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் அனைத்தையும் விரைவாக மீட்டுத்தருவதாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேப்பாப்புலவு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குமிடையில் நேற்று(22)  சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, நீண்ட நாட்களாகப் போராடும் மக்களுக்கு சிறந்த தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க இப் பிரச்சினை குறித்து தொலைபேசி வாயிலாக இராணுவத் தளபதியுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரின் செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com