கேப்பாப்பிலவு போராட்டக்காரர்களை படம் எடுத்து அச்சுறுத்தும் விமானப்படையினர்

கேப்பாபுலவு போராட்டத்தில்ஈடுபடும் மக்களை புகைப்படக் கமராக்கள் மூலம் படம் எடுத்தல் வீடியோ எடுத்தல் மற்றும் பைனாகுலர் வழியாக கண்காணிக்கும் நடவடிக்கைகளில் விமான படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இது வரை காலமும் தமது கையடக்க தொலைபேசி ஊடாக புகைப்படம் எடுத்த விமான படையினர் இன்று தொழில் ரீதியான புகைப்பட கமராக்களை பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை புகைப்படம் எடுத்ததனை அவதானிக்க முடிந்தது.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை யார் யார் வந்து சந்தித்துச் செல்கிறார்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யார் யாருக்கு தகவல் சொல்கிறார்கள், யார் யார் ஊடகங்களிற்கு நேர்காணல் கொடுக்கிறார்கள் போன்ற விடையங்களை முன்னாலுள்ள விமானப்படை முகாமில் இருந்து பைனாகுலர் மூலம் கண்காணிக்கும் விமானப்படையினர் கமராக்களுடன் வந்து தொடர்ச்சியாக படம் எடுத்துச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை எங்கள் சொந்த நிலங்களில் கால் பதிக்க அனுமதித்தால் மட்டுமே எமது போராட்டத்தை நிறுத்துவோமென கடந்த 31.01.2017 தொடக்கம் கேப்பாப்பிலவில் விமானப்படையினரின் முகாமிற்கு முக்பாக கவனயீர்ப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் மக்கள் இன்று வியாழக்கிழமையுடன் (16) 17ஆவது நாளாக தங்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தங்கள் 84 குடியிருப்புக் காணிகளுக்காக போராடிவரும் அவர்கள் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com