கேப்பாபுலவு நில மீட்பு மக்கள் மைத்திரியை சந்திக்க முயற்சி!

கேப்பாபுலவில் தொடர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன், 132 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

போராட்ட இடத்திற்கு சென்ற வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரனிடம் மக்கள் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக குறித்த சந்திப்புக்கு ஏற்ப்பாடு செய்துதருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

தொடர் நில மீட்பு போராட்டத்தை தொடர்ந்து மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதும், இதுவரை காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு நெருக்கடிகளுக்குள் மத்தியில் தாம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் தமது சொந்த நிலத்தில் கால் பதிப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com