கேப்பாபுலவு “நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை” பிரசுரம் வெளியீடு

கேப்பாபுலவு “நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை” எனும் தொனியில் விதை குழுமத்தினால்  பிரசுரம் – 01 வெளியிடப்பட்டுள்ளது.

கேப்பாபிலவு மக்களின் போராட்டங்கள் குறித்தபல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள  இப் பிரசுரம் குறித்து குறிப்பிட்டுள்ள விதை குழுமத்தினர், பிலக் குடியிருப்பு மக்களின் பிரச்சினைகளை வரலாற்று ரீதியாகவும் போராட்ட அனுபவ ரீதியாகவும் முன்வைக்கும் இப் பிரசுரம் தனது முறையியல் ஊடாக பிற காணி தொடர்பானதும் இன்னும் இன்னும் பல்வேறு பட்ட பிரச்சினைகளில் சிக்குண்டிருக்கும் எமது சமூகத்தின் கதைகளையும் வரலாற்றையும் தொகுக்கத் தூண்டும் முயற்சியே.

இதனூடாக தரவுத் தளம் சார்ந்தும் தொடர்ச்சி சார்ந்தும் நாம் புரிதல்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதனூடாக எதிர்காலத்தில் உருவாக்கப் போகும் மக்கள் போராட்டங்களுக்கு ஒரு தீக்குச்சியளவு வெளிச்சத்தையாவது காட்டுவது தான் இந்தப் பிரசுரத்தின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளனர்.

எமது வாசகர்கள் பிரசுரத்தை படிக்க கீழ் உள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கிக் கொள்ளவும்.

“நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com