கேப்பாபிலவில் கல்வியைத் துறந்து போராடும் மாணவர்களிற்கு ஆதரவாக பாடசாலைகளில் ஆதரவுப் போராட்டம்

விமானப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது சொந்த நிலங்களை மீட்பதற்கு அறவழியில் போராட்டம் நடத்தி வரும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஆதரவாக வடமாகாணம் தழுவிய தொடர் போராட்டம் திங்கட்கிழமை (20) முதல் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கிலுள்ள சகல பாடசாலைகளின் மாணவர்களும் திங்கட்கிழமை காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரை ஒரு மணி நேரம் பாடசாலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் படையினரிடமிருந்து தமது சொந்தக் காணிகளை மீட்பதற்காகத் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 20ஆவது நாளாகவும், புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் 16ஆவது நாளாகவும் (சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் 6ஆவது நாளாகவும்) தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் 54 சிறுவர்களும் பாடசாலைக்குச் செல்லாமல், பெற்றோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலமீட்புக்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக வடமாகாணம் முழுவதிலும் தொடர் போராட்டங்கள் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக நாளை திங்கட்கிழமையில் இருந்து திட்டமிட்டவாறு தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com