சற்று முன்
Home / செய்திகள் / கேபிள் யுத்தத்திற்கு முடிவு – “யாழ் மாநகரசபைக் கம்பங்களிலேயே கேபிள் இணைப்பு” – சபையில் ஏகமனதான தீர்மானம்

கேபிள் யுத்தத்திற்கு முடிவு – “யாழ் மாநகரசபைக் கம்பங்களிலேயே கேபிள் இணைப்பு” – சபையில் ஏகமனதான தீர்மானம்

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கேபிள்களுக்கான மின்கம்பங்களை யாழ் மாநகரசபையே நாட்டுவது என்றும் அனைத்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களும் யாழ் மாநகரசபையின் மின்கம்பத்திலேயே தமது கேபிள்களை பொருத்தவேண்டும் என்றும் சபையில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத கேபிள் கம்பங்கள் யாழ் மாநகரசபை எல்லைக்குள் நாட்டப்பட்டமையும் அதனை யாழ் மாநகரசபை அகற்ற முற்பட்டமையாலும் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்துவருகின்றது. இது தொடர்பில் நீதிமன்றிலும் வழக்குத் தொடரப்பட்டு வழக்கு நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையிலேயே ஒரு நிறுவனத்திற்கு கம்பம் நாட்ட அனுமதி வழங்கினால் கம்பம் நாட்ட விண்ணப்பிக்கும் அனைத்து நிறுவனத்திற்கும் கம்பம் நாட்ட அனுமதிக்கவேண்டும் என்றும் சுமர் ஏழு எட்டு நிறுவனங்கள் கம்பம் நாட்ட வந்தால் ஒவ்வொன்றுக்கும் அனுமதி வழங்குவதா என்று இன்று நடைபெற்ற சபை அமர்வில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்தே ஒப்பந்த அடிப்படையில் யாழ்ப்பாண மாநகரசபையே கேபிள் இணைப்புக்களுக்கான கம்பங்களை நாட்டுவது என்றும் அக் கம்பங்களின் ஊடகவே கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது இணைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக கம்பங்களை நாட்டுவதற்கு அனுமதிப்பதில்லை என்றும் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ் மாநகரசபை எல்லைக்குள் கேபிள் கம்பங்களை நாட்டுவதற்கு கடந்த யூலை மாதம் ஆக்ஸ் மீடியா நிறுவனமும் கடந்த நவம்பரில் ரைமாஸ் நிறுவனமும் யாழ் மாநகரசபையிடம் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தன.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் ரைமாஸ் நிறுவனத்தினரால் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக கம்பங்கள் நாட்டப்பட்டன. அதனை யாழ்ப்பாணம் மாநகரசபை அகற்ற முற்பட்டது. இதனை பொலிசார் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் முன்னர் விண்ணப்பித்த ஆக்ஸ் மீடியா நிறுவனத்தின் மின்கம்ப உற்பத்தி நிறுவன வேலைத்தளத்திற்கு சென்ற யாழ் மாநகரசபையின் பொறியியல் பிரிவினர் சென்று ஆராய்ந்தனர்.

அது குறித்து இன்றைய அமர்வில் குறிப்பிட்ட பிரதம பொறியியலாளர் குறித்த நிறுவனத்தினர் பொது மின்கம்பத்தில் தமது கேபிள்களை பொருத்த இணக்கம் வெளியிட்டிருக்கவில்லை எனவும் தொழில் போட்டி காரணமாக மற்றய நிறுவனத்தினர் குந்தகம் விளைவிக்கக் கூடும் என அஞ்சுவதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும் இதனை ஏற்க மறுத்த சபை உறுப்பினர்கள் தமது கம்பத்தின் ஊடாகவே இணைப்புக்களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து குறிப்பிட்ட யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இவை அனைத்தும் குறித்து தான் ஆராய்ந்தாகவும் ஆனால் போட்டிகாரணமாக ஒருவருடைய இணைப்பிற்கு மற்றயவர் குந்தகம் விளைவித்தால் அதற்கெல்லாம் யாழ் மாநகரசபை பொறுப்புக்கூறிக்கொண்டிருக்கமுடியாது எனவும் எனவே தனித்தனியாக கம்பங்கள் நாட்ட அனுமதி வழங்குவதே சரியானது எனவும் குறிப்பிட்டார்.

எனினும் உறுப்பினர்கள் அதனை மறுதலித்து கருத்துக்கள் தெரிவித்த உறுப்பினர் ஒருவர் குறித்த நிறுவனம் ஒன்றினால் நாட்டப்படும் கம்பங்கள் அனைத்தும் இலங்கை மின்சாரசபையால் சேதமடைந்தவை எனக் கழித்துவிடப்பட்ட மின்கம்பங்களே எனவும் இவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு யார் பொறுப்பேற்பது எனவும் கேள்வி எழுப்பினார்.

இவற்றினை ஆராய்ந்த சபை திண்மக் கழிவுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்த கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படவுள்ள நிலையில் கேபிள் கம்பங்களை சேதமாக்குவோர் குறித்தும் கண்காணிக்க முடியும் எனவும் எனவே யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கேபிள்களுக்கான மின்கம்பங்களை யாழ் மாநகரசபையே நாட்டுவது என்றும் அனைத்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களும் யாழ் மாநகரசபையின் மின்கம்பத்திலேயே தமது கேபிள்களை பொருத்தவேண்டும் என்றும் சபையில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com