சற்று முன்
Home / செய்திகள் / கேகாலையில் வாக்களித்தவர்கள் மீது தாக்குதல்.

கேகாலையில் வாக்களித்தவர்கள் மீது தாக்குதல்.

கேகாலை – தெரணியகல பகுதியில் வாக்களித்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு தரப்பினருக்கு வாக்களிக்க வேண்டுமென சிலர் அச்சுறுத்தியதாகவும் அதையும் மீறி தான் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த சிலர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வீடொன்றுக்குள் நுழைந்த சிலர், வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடுஆண் ஒருவரையும் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனால், அங்கு அமைதியின்மையான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com