கூட்டு தொழிற்சங்க பேச்சுவாரத்தை வெற்றி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு.

Ministry_of_Educationஅட்டன் கல்வி வலயத்தில் ஆசிரியர்களின் பிரச்சினைகள் குறித்து 08.06.2016 அன்று காலை மாகாண கல்விப்பணிப்பாளர் ஏக்கநாயக்க அவர்களிடம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை வெற்றியளித்துள்ளதாக தமிழர் ஆசிரியர் சங்க்தின் இணைப்பாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்தின் ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  எட்டு தொழிற்சங்களங்கள் ஒன்றிணைந்து 08.06.2016 அன்று காலை 10.00 மணியளவில் மாகாண கல்வி அலுவலகத்தில் பேச்சு வாரத்தையில் ஈடுபட்டன.

 

இதில் பிரதான பிரச்சினையான கடந்த வாரம் அட்டன் கல்வி வலயக்கல்விப்பணிப்பாளரினால் அனுப்பப்பட்ட க.பொ.த பெறுபேறுகள் குறித்த கடிதத்தில் கடும் சொற் பதங்களை பிரயோகித்து ஆசிரியர்ககளிடம் சித்தி பெறாத மாணவர்களுக்கு எழுத்து மூலம் விளக்கம் தர வேண்டும் என்ற கடிதம் காரணத்தினை கண்டறியும் கடிதமாக மாற்றப்பட வேண்டும் எனவும் அதனை உடனடியாக அதிபர்களுக்கு மீள திருத்தி அனுப்புமாறு மாகாண கல்விப்பணிப்பாளர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து இடமாற்ற சபையின்றி செய்யப்படும் இடம் மாற்றங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தேவையின் கருதி செய்யப்படும் இடமாற்றங்கள் கூட மாகாண கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது வரை காலம் சுமார் 2000 ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத நிலுவை சம்பள பிரச்சினையினை தொடர்பாக மாகாண பிரதம கணக்காளர் நடைபெற்ற பேச்சுவாரத்தையில்  பூர்த்தி செய்யப்படாத பிரச்சினையினையும் நிலுவை சம்பளம் வழங்கி முடித்த வலயங்களிலிருந்து உத்தியோகஸ்த்தர்களை பெற்று சிரமதானம் மூலம் நிலுவை சம்பளத்தினை கணக்கிட்டு வழங்க  இணக்கம் காணப்பட்டுள்ளது.

கோவைகள் பூர்த்தி செய்வதற்காக கலந்துரையாடப்பட்டன இதனை உடனடியாக பூர்த்தி செய்வதறகுரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிர்வாக உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஞாயிறு தினங்களில் நடைபெறும் அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் கூட்டம் காரணமாக அவர்களின் சொந்த தேவைகள் மத வழிபாடுகளை செய்ய முடியாது உள்ளதாகவும் இதனால் தாங்களின் அடிப்படை உரிமைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியதையடுத்து,

இது குறித்து அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இத்தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அட்டன் கல்வி வலயத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் பூரண ஒத்துழைப்பு தருவதாகவும் தொழிற்சங்கங்கள் உறுதியளித்தன.

இக்கலந்துரையாடலுக்கு இலங்கை ஆசிரிய சங்கத்தின் இணைப்பாளர் வி.எஸ்.துதிமேக தேவன், கல்விசார் ஊழியர் சங்கத்தின் இணைப்பாளர் க.சுந்தரலிங்கம், இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செய்லாளர் சங்கர் மணிவண்ணன், ஐக்கிய தமிழ் ஆசிரியர் சங்கத்தின்  பொதுச்செயலாளர் ஜெயசீலன், ஆசிரியர் விடுதலை முன்னணியின் பொருளாளர் வி.கங்காதரன், காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் சார்பாக ஜீவகயேஸ், மலையக ஆசிரிய முன்னணி சார்பாக வினோத், கலந்துக்கொண்டுள்ளதுடன் இதற்கு இலங்கை ஆசிரியர் சபை ஆதர வழங்கியுள்ளதாகவும் இப்பிரச்சனைகள் மிகவும் சமுகமாக தீர்ப்பதற்கு ஒத்துழைத்த மாகாண கல்விப்பணிப்பாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com