கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து – தொழிலாளர்கள் ஏமாற்றம் – கொடும்பாவி எரித்து போராட்டம் தொடர்கிறது

img_2822பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூபா 620 இலிருந்து ரூபா 730 ஆக உயர்த்தும் கூட்டு ஒப்பந்தம் இன்று (18) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு தொழிலாளர் சங்கம் ஆகிய தோட்ட தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இன்று (18) இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இவ்வுடன்படிக்கை இரு வருடங்களுக்கு அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த சம்பள அதிகரிப்பு போதாது எனவும், நாளாந்தம் ரூபா 1,000 சம்பளமாக வழங்கப்பட வேண்டுமென தெரிவித்து, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரபத்தனை பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதில் 800ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பெல்மோரல் கொழுந்து நிறுவை செய்யும் இடத்திலிருந்து பேரணியாக தோட்ட தொழிற்சாலை வரை சென்றனர்.

அங்கு சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் தொழிற்சாலைக்கு முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இவர்கள் உருவ பொம்மைகளை எரித்தும், டயர்களை எரித்தும், ஒப்பாரி வைத்தும் உடனடியாக கூட்டு ஒப்பந்தத்தினை முடித்து சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தமக்கு வழங்க வேண்டிய ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.img_2732 img_2743 img_2772 img_2777 img_2808
img_2827

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com