கூட்டமைப்பைப் பிழவுபடுத்தாதீர்கள் – எச்சரித்தாரா இந்திய வெளியுறவுச் செயலர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் உள்ளக முரண்பாடுகளைக் களைந்து அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுமாறு இந்திய கடுந்தொனியில் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் முரண்பாடுகளுடன் ஒருவரை ஒருவர் விமர்சித்துவருவதாகவும் கூட்டமைப்பினைப் பிழவுபடுத்தும் அளவிற்கு நிலமை சென்றிருப்பதாகவும் தெரிவித்து தீர்வு நோக்கி நகரும் இத்தருணத்தில் ஒற்றுமையைாகச் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினுள்ளும் வெளியிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான பிளவுகளுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சிரமங்கள் நிலவுகின்றன. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வழமையாக இராஜதந்திரிகளுடனான சந்திப்பு மற்றும் அரசுடனான பேச்சுக்களின்போது தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மட்டுமே பங்கேற்றுவந்தநிலையில் நேற்றைய சந்திப்பில் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் சம்பந்தன் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகின்றது.

குறிப்பாக தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவரும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார். கடந்தவாரம் கூட்டமைப்பின் பிழவிற்கு சம்பந்தனே காரணமா அமைவார் சுரேஸ் பிரேமச்சந்திரன்  என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய சந்திப்பின்போது அரசாங்கம் வழங்கிய பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியது. இந்த விடயங்கள் தொடர்பில் தாம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஜெய்சங்கர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com