சற்று முன்
Home / செய்திகள் / கூட்டமைப்பு வசமிருந்த வட்டாரங்கள் பல முன்ணி வசம்

கூட்டமைப்பு வசமிருந்த வட்டாரங்கள் பல முன்ணி வசம்

நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருந்த வட்டாரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்ணி உட்பட வேறு கட்சிகள் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடைய தொகுதியில் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபைகளுக்கு உட்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருந்த வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் பெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடைய தொகுதிகளில் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது வெற்றினை பதிவு செய்துள்ளது.

யாழ்.மாநகர சபையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி வெற்றி பெற்ற வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com