கூட்டமைப்பு சரா எம்.பியை திட்டி தீர்த்த மக்கள் – பரபரப்பு வீடியோ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனை காணாமல் போனவர்களின் உறவினர்கள் கடுமையாகத் திட்டியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

“ஜனாதிபதியிடம் தெரிவிக்க ” நிகழ்விற்காக யாழ் வந்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க  காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நாடத்தியிருந்தனர் அதன் போது அங்கு வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மக்களை கடுமையாக ஆபாச வார்த்தைகள் பிரயோகித்து திட்டியிருந்தார்.

பின்னர்  காணாமல் போனவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் சிலரை ஜனாதிபதி சந்திக்கப்போவதாக அழைத்துச் சென்று ஏமாற்றி அனுப்பினர்.

அவ்வேளையில் வேதனையின் உச்சத்தில் இருந்த  காணாமல் போனவர்களின் உறவினர்கள்  நிகழ்வு முடிந்து வெளியே வந்த சரவணபவன் எம்பியை கடுமையான வார்த்தைப்பிரயோகங்களால் திட்டித் தீர்த்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மக்களை சமாதானம் செய்ய முயன்ற போதும் மக்கள் அவரை தொடர்ந்து திட்டியவாறிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com