சற்று முன்
Home / செய்திகள் / கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் – ரணிலைக் காப்பாற்றியதற்கு பரிசு

கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் – ரணிலைக் காப்பாற்றியதற்கு பரிசு

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், அபிவிருத்தி தேவைகளுக்கான நிதியாக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசு செயற்பட முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது.

எனவே, இதனை ஐக்கிய தேசியக் கட்சி – கூட்டமைப்பு அரசு என்றே கூற வேண்டும்.

கல்முனை பிரதேச செயலகத்தை தனியாக அமைத்து தருவது மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அபிவிருத்தி நிதியாக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக அரசு கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com