கூட்டமைப்பு இரட்டைவேடம் போடுகிறது

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுவதாக தமிழத் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

அந்தக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் சிவகுரு இளங்கோ தெரிவித்ததாக, அந்தக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்தச் சட்ட வரைபின் உள்ளடக்கம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுகின்றனர். தமிழ் மக்களை மிருகங்களை போல மிகக் கொடூரமாக அடக்கக்கூடிய சட்டவரைபு என்பதனை நன்கு தெரிந்து கொண்டு மறைமுகமாக முழு ஆதரவையும் வழங்கிவிட்டு தமிழ் மக்கள் முன்னால் தப்பித்துக் கொள்வதற்காக அந்தச் சட்ட வரைபின் உள்ளடக்கம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைவதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளதாக, அந்தப் பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com