கூட்டமைப்பில் உள்ள சிலர் பின்கதவால் அரசுடன் பேச்சு

கூட்­ட­மைப்­பின் தலை­வர்­க­ளாக உள்ள ஒரு சிலர் பின் கத­வால் சென்று அர­சோடு பேசு­கின்­றார்­கள். தங்­க­ளுக்­குத் தேவை­யான வசதி வாய்ப்­புக்­க­ளைப் பெற்­றுக் கொள்­கின்­றார்­கள். பத­வி­க­ளைப் பெற்­றுக் கொள்­கின்­றார்­கள். அத­னால் தமிழ் மக்­க­ளுக்கு எந்த நன்­மை­யும் இல்லை எனத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் தெரி­வித்­தார்.

வவு­னியா செட்­டி­கு­ளம், வீர­பு­ரம் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்ற மே தினக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வரை எமது உரி­மைக்­கா­க­வும் தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­க­வும் இன்று இந்த மே தினத்­தைக் கடைப்­பி­டித்­துக்­கொண்டு இருக்­கின்­றோம். நீண்ட கால­மா­கத் தமிழ் மக்­க­ளுக்கு இந்த மண்­ணிலே இழைக்­கப்­பட்ட அநீ­தி­கள் ஒரு புறம். அத­னால் தொழில் ரீதி­யில் ஏற்­பட்ட பாதிப்­புக்­கள் இன்­னொ­ரு­பு­றம். ஆகவே இந்­தத் தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டு­மா­னால் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு கௌர­வ­மான- நிரந்­த­ர­மான அர­ச­யல் தீர்வு எட்­டப்­ப­ட­வேண்­டும். எங்­க­ளு­டைய இளை­ஞர்­கள், யுவ­தி­கள், தொழி­லா­ளர்­கள், கூலித் தொழி­லா­ளர்­கள் எல்­லோ­ருக்­குமே ஒரு விமோ­ச­னம் கிடைக்­க­வேண்­டு ­மாக இருந்­தால் நீண்­ட­கா­ல­மாக இந்த நாட்­டில் புரை­யோ­டிப் போ­யுள்ள இனப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான ஒரு அர­சி­யல் தீர்வு வேண்­டும்.

தேசிய அரசு என்று இந்த அர­சைக் கொண்டு வந்­த­தி­லி­ருந்து இந்த இரண்டு வருட காலத்­துக்­குள்ளே இந்த மேடை­யில் பல விட­யங்­கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. போர் முடி­வுற்று எட்டு வரு­டங்­கள் ஆகி­யும் இங்கு உள்ள மக்­க­ளுக்கு வீட்­டுத்­திட் டம் முறை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை.

உங்­க­ளுக்­குத் தெரி­யும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் நான்கு அர­சியல் கட்­சி­கள் இருக்­கின்­றன. நான்கு அர­சி­யல் கட்­சி­க­ளைக் கொண்டு ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக் கூட்­டத்­தைக் கூட்­டு­வதே கல்­லில் நார் உரிக்­கும் செயற்­பா­டாக உள்­ளது.

நாங்­கள் பல தட­வை­கள் இந்த விட­யங்­க­ளைக் கூறித் தமிழ் மக்­க­ளுக்கு உள்ள அன்­றா­டப் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து அர­சி­யல் தீர்வு காணும் விட­யம் வரை எடுத்த தீர்­மா­னங்­கள் அத்­த­னை­யை­யும் தலை­கீ­ழாக மாற்­றித் தமி­ழ­ர­சுக் கட்­சி­யும் அதன் தலை­மை­யும் தன்­னிச்­சை­யாக எடுத்த ஒரு முடி­வு­தான் இன்று இந்த மக்­கள் வீதி­யி­லி­றங்­கிப் போரா­டும் நிலை­மைக்­குக் கொண்டு சென்­றுள்­ளது.
எங்­கள் மக்­க­ளுக்­குப் பல்­வேறு பிரச்­சி­னை­கள் உள்­ளன. இந்­தப் பிரச்­சி­னை­களை நாங்­கள் தீர்க்­க­வேண்­டு­மாக இருந்­தால் கூட்­ட­மைப்­பில் உள்ள நான்கு பிர­தான கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளுக்­கி­டையே பேச்­சு நடத்தப்பட வேண்­டும். நாங்­கள் தொட்­டுத் தொட்டு ஒவ்­வொரு விட­யங்­க­ளுக் கும் தனித் தனி­யா­கப் பேசிக்­கொண்டு இருக்க முடி­யாது. இதனை ஒரு வரு­டத்­துக்கு முன்­னரே சம்­பந்­தன் ஐயா­வுக்­குச் சொல்­லி­யி­ருந்­தோம்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் நாங்­கள் எடுத்த தீர்­மா­னங்­கள் எத­னை­யுமே சம்­பந்­தன் ஐயா­வின் தலை­மை­யில் உள்ள தமி­ழ­ர­சுக்­கட்சி நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. ஆட்சி மாற்­றத்­தி­லி­ருந்து ஐக்­கிய நாடு­கள் சபை வரை இலங்கை அர­சுக்­குக் கால அவ­கா­சத்தை நீடித்­துக் கொடுக்­கும் செயற்­பாட்­டைத்­தான் கூட்­ட­மைப்­பில் உள்ள சில தலை­வர்­க­ளும் செய்து கொண்டு இருக்­கின்­றார்­கள். இந்த நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வால் தமிழ் மக்­க­ளுக்கு என்ன விமோ­ச­னம்?

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் கடந்த 16வருட கால­மாக உட்­கட்சி ஜன­நா­ய­கப் போராட்­டம் செய்து கொண்டு இருக்­கி­ன­்றோம். இதனை ஒரு வெளிப்­ப­டை­யான ஜன­நா­யக ரீதி­யான கட்­சி­யாக மாற்­ற­வேண்­டும். ஆனால் முடி­ய­வில்லை. ஒரு சில தனி­ம­னி­தர்­கள் தான் முடி­வு­களை எடுக்­கின்­றார்­கள். இந்­தச் சர் வா­தி­கா­ரப் போக்கை மாற்­ற­வேண்­டிய பொறுப்பு உங்­க­ளி­டம் தான் இருக்­கின்­றது. இந்த அர­சுக்கு அழுத்­தம் கொடுத்­தால் மகிந்த ராஜ­பக்ச வந்­து­வி­டு­வார் என்று சொல்­கி­றார்­கள். இன்று மக்­கள் போராட்­டங் க­ளுக்­குத் தலைமை தாங்க ஆள்­கள் இல்­லை-­ – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com